Home இலங்கைஅமெரிக்காவுக்கு பறக்கிறார் பஸில் ராஜபக்ஸ!

அமெரிக்காவுக்கு பறக்கிறார் பஸில் ராஜபக்ஸ!

by admin

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அவர் அமெரிக்கா செல்வதற்காக அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போதும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. எனினும் சமீபத்தில் நீதிமன்றத் தடை தளர்த்தப்பட்டு ஜனவரி மாதம் வரை அவர் வெளிநாடு செல்லத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அதன்படி தற்போது கட்டுநாயக்க சென்றுள்ள அவர் முதலில் டுபாய் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More