Home இலங்கைமூன்றாவது நாளாக PTA க்கு எதிரான போராட்டம் 

மூன்றாவது நாளாக PTA க்கு எதிரான போராட்டம் 

by admin

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாகவும் இன்று(12) வடமராட்சியில் இடம்பெற்றது.

வல்லை முனியப்பர் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து ஊர்திவழிப் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் மூன்றாவது நாள் வடமராட்சி பகுதிகளில் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More