
யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை 61 கிராம் போதைப்பொருளுடன் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கைப்பற்றப்பட்ட போதை பொருளுடன், மானிப்பாய் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தையும் ஒருவர் கொழும்பையும் சேர்ந்தவரென தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகம் வெளியிட்ட காவற்துறையினர், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
Add Comment