Home இலங்கை வட்டுக்கோட்டை துணைவியில் 11 வாள்களுடன் இளைஞன் கைது!

வட்டுக்கோட்டை துணைவியில் 11 வாள்களுடன் இளைஞன் கைது!

by admin

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞனை காவற்துறையி விசேட அதிரடி படையினர் கைது செய்து வட்டுக்கோட்டை காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு (13.09.22) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல விதமான வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக காவற்துறை விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை அடுத்து அங்கு விரைந்த அதிரடி படையினர் ஆலயத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள்.

அதன் போது அங்கிருந்து பல வடிவங்களில் செய்யப்பட்ட 11 வாள்களை மீட்டனர். அத்துடன் 22 வயதான இளைஞனையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட வாள்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் வட்டுக்கோட்டை காவற்துறைனிரிடம் ஒப்படைத்த நிலையில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தை குறித்த கோயிலின் பூசகர்கள் எனவும், வாள்களுடன் கலையடி, குறி சொல்பவர் எனவும், அதற்காக பயன்படுத்தும் வாள்களே அவை என இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More