Home இலங்கைகுருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு!

குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு!

by admin


குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது  மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்   நேற்று(16) மாலை அப்பகுதிக்கு சென்று தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

 இதன்போது சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்ட சார்ள்ஸ் நிர்மலநாதன்   , புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொட‌ர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More