145
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது.
காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன.
பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி , குறித்த காணியினை உடனடியாக துப்புரவு செய்ய வேண்டும் எனவும் , இல்லாவிடின் அதனை நகர சபை கையகப்படுத்தும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
Spread the love