இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்களுக்கு போதிய உணவு இல்லை

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவினை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையர்களின் உணவு முறை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படா விடின் நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் எனவும் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பண்டங்களின் விலை உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்துள்ளதாகவும் நாடு முழுவதும் உணவு விலைகள் அதிகமாக இருப்பதால், பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை உண்பதில்லை என்பதுடன் மாறுபட்ட உணவுகளை உட்கொள்வதும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிவாரணத்துக்கு 63 மில்லியன் டொலர்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அதன் பாதியளவே தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களிடமிருந்தும், ஐக்கிய நாடுகளின் மத்திய அவசரகால பதில் நிதியம், தனியார் துறை பங்காளிகள் மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களிடமிருந்தும் மொத்தமாக 29.35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.