Home இலங்கையாழ்.பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம்

யாழ்.பிரம்படியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம்

by admin

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது  நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. 

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 

கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More