அபிவிருத்தி லொத்தர் சபையின் ராசி சீட்டிழுப்பின் வெற்றியாளரான கொக்குவில் பகுதியை சேர்ந்த வி,சிவராஜ் என்பவருக்கு 35 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கிவைக்கப்பட்டதோடு அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்பின் விற்பனை மேம்படுத்தலும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர்சபையின் தலைவர் அஜித் குணரட்ன நாரக்கல, உதவி பொது முகாமையாளர்,பிராந்திய.யாழ் மாவட்ட முகாமையாளர் விற்பனை முகவர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.