இந்தியா பிரதான செய்திகள்

மாணவி புகையிரதம் முன்பு தள்ளி கொலை

சென்னை பரங்கிமலை புகையிரத நிலையத்தில் மாணவி ஒருவர் புகையிரதம் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தையும் உயிாிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் வாழ்ந்துவரும் சத்யப்ரியா என்பவரே அவ்வாறு கொல்லப்பட்டுள்ளாா். . இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். சத்யப்ரியாவும் சதீஸ் என்பவரும் காதலித்து வந்த நிலையில், சத்யப்ரியாவின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதனால் சதீஷைவிட்டு சத்யப்ரியா விலக ஆரம்பித்தாா்.

இந்த நிலையில், நேற்று கல்லூரி செல்வதற்காக பிற்பகல் 1.30 மணியளவில் பரங்கிமலை புகையிரத நிலையத்திற்கு சென்ற சத்யப்ரியாவுடன் அங்கு வந்த சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தபோது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார புகையிரதம் நடைமேடைக்குள் நுழைந்து கொண்டிருந்த போது சதீஷ் சத்யப்ரியாவைத் தள்ளிவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

சத்யப்ரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தப்பி ஓடிய சதீஷை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட தேடப்பட்ட நிலையில் சதீஷின் கைபேசி சிக்னலை பின்தொடர்ந்தபோது அவர் துரைப்பாக்கம் பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சத்யப்ரியாவின் தந்தைக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.