Home இலங்கைதேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராக வேம்படி மாணவி தெரிவு

தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராக வேம்படி மாணவி தெரிவு

by admin

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும்,  ஸ்ரீ ஜெவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.

இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடலை மாணவ இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டார். 

சிறந்த பெண் புத்தாக்குனருக்கான பதக்கத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியநஹே அணிவித்ததுடன், இவருக்கான சான்றிதழை வளர்முக நாடுகளுக்கான பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் தலைவி பேராசிரியர் சுகந்திக்கா சுரேஷ் அவர்களும் வழங்கினர்.

குறித்த நிகழ்வு கடந்த 14ம் திகதி ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூதவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More