Home இலங்கைதீவகங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு என பேசப்படும் நிலையில் நெடுந்தீவு சென்ற இந்திய துணைத்தூதுவர்

தீவகங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு என பேசப்படும் நிலையில் நெடுந்தீவு சென்ற இந்திய துணைத்தூதுவர்

by admin

யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அதன் போது, கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகளுடன் சிவில் சமூக உறுப்பினர்களுடன் இந்திய துணைத் தூதுவர் கலந்துரையாடினார்.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர், இந்திய புலமைப்பரிசில் பற்றி விளக்கமளித்ததோடு அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகளையும் வழங்கிவைத்தார்.

தீவகப்பகுதிகளில் சீன நாட்டினுடைய ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசப்படும் நிலையில் இந்தியத் துணைத்தூதரின் நெடுந்தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More