179
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சாவை கடத்தி வர பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love