Home இலங்கைவீட்டு தோட்டத்தில் 53  கஞ்சா செடிகளை வைத்திருந்தவர் கைது

வீட்டு தோட்டத்தில் 53  கஞ்சா செடிகளை வைத்திருந்தவர் கைது

by admin

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில்  53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை  சவளக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  சவளக்கடை  காவல்துறை பிரிவிற்குட்பட்ட  அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக  இரகசிய தகவல் ஒன்றை அடுத்து  காவல்துறையினர் திங்கட்கிழமை(24) தீபாவளி தினத்தன்று    தேடுதல் மேற்கொண்ட நிலையில் சந்தேக நபரை     கைது செய்தனர்.

கைதானவர்  அன்னமலை பகுதியை  சேர்ந்த 58 வயதான நபர்  என்பதுடன்  வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன்  இணைத்து குறித்த 53  கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருட்களையும்   நீதிமன்றத்தில் பாராப்படுத்த  நடவடிக்கை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More