அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற ரஞ்சன் ராமநாயக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளாா்.
அவர் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக வெளிநாடு செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், இவ்வாறு அவரை குடிவரவுத் துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக தொிவிக்கப்பட்டுள்ளது