ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் இன்று கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டநிலையில் , தலா 2 லட்சம் ரூபா வீதமான சரீர பிணை பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
கோட்டாய ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் அப்போது கைது செய்யப்பட்டு கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனா்.
இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள் மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்து, நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கரையோர காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பலவந்தமாக காயங்கள் ஏற்படுத்தியமை தொடர்பில் உமாச்சந்திரா பிரகாஷ் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து உமாச்சந்திரா பிரகாஷை, இன்றைய தினம் (ஒக்.28) கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு,காவல்துறையினர் நேற்றுஒக்.27) அழைப்பாணை விடுத்திருந்ததனையடுத்து அவா் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த நிலையில், கரையோர காவல்துறையினரினால் அவா்கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது