
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்விலேயே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் எம்.ரி.எஸ். இராமச்சந்திரன், வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய, யாழ் மாவட்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ஈ.எம்.யு.யு.குணரத்ன, யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை அத்தியட்சகர் உயித் லியனகே, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.



Spread the love
Add Comment