Home இலங்கை யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு இருவர் காயம்!

யாழ் சூரன் போரில் நிஜ வாள் வெட்டு இருவர் காயம்!

by admin

சூரன் பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை சேர்ந்த 33 வயதுடைய நவரத்தினராசா ஜனந்தன் மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த 38 வயதுடைய கிருஷ்ணகுமார் கஜானந்தன் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

வட்டுக்கோட்டை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.10.22) சூரன் போர் திருவிழா இடம்பெற்றது.

அதன் போது, ஆலயத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தர்க்கம் கைக்கலப்பாக மாறி வாள் வெட்டில் முடிவடைந்தது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More