Home இலங்கைநீதி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட செயலகம் முன் போராட்டம்

நீதி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட செயலகம் முன் போராட்டம்

by admin

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடமாடும் சேவை நடைபெறும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் , நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஒ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More