
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவரை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான கட்டளையை கோட்டை நீதவான் திலிண கமகே, இன்று (02) பிறப்பித்துள்ளாா்.
சம்பவத்துடன் தொடர்புடைய நீதவான் விசாரணையை மீண்டும் கோாிய போதே நீதவான் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று ரிஷாட் பதியூதீன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment