145
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்றைய தினம் புதன்கிழமை 4 (09/11.22)58 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது , படகினுள் இருந்து 458 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டனர். அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்
Spread the love