Home இலங்கைநெடுந்தீவு கடற்பரப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

by admin

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்றைய தினம் புதன்கிழமை  4 (09/11.22)58 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது , படகினுள் இருந்து 458 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டனர்.  அதனை அடுத்து படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More