Home இலங்கைவடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக நா.வேதநாயகன்!

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக நா.வேதநாயகன்!

by admin

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின் பதவிகள் வறிதான நிலையில் தற்போது புதிதாக மூவர் நியமிக்கப்பட்டு அதில் ஒருவராக வேதநாயகன் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னர் அரச அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் மற்றுமொரு உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More