Home இலங்கைஇந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாண காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் மீது கடந்த புதன்கிழமை இரவு போத்தல் ஒன்றினை வீசி தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

அது தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் கார் ஒன்றில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிய வந்ததை அடுத்து , காரினை அடையாளம் கண்டு அன்றைய தினம் காரினை ஓட்டியவர் மற்றும் காரில் இருந்த இருவர் ஆகிய மூவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More