Home இலங்கை யாழில். சிரமதானத்தின் போது வெடிப்பு சம்பவம் – இருவர் காயம்!

யாழில். சிரமதானத்தின் போது வெடிப்பு சம்பவம் – இருவர் காயம்!

by admin

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரமதானத்தின் போது மர்ம பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். 

கோப்பாய் – கைதடி வீதி ஓரங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து மரம் நடும் செயற்திட்டம் ஒன்றினை  நீர்வேலி பகுதியை சேர்ந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு இருந்தனர். 

அதன் போது மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் சிரமதான பணியில் ஈடுபட்டு இருந்த இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த இருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More