Home இலங்கையாழில். நிலத்தினுள் புதைத்த 150 லீட்டர் கோடா மீட்பு ஒருவர் கைது!

யாழில். நிலத்தினுள் புதைத்த 150 லீட்டர் கோடா மீட்பு ஒருவர் கைது!

by admin

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீடொன்றின் பின் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 150 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் , அங்கிருந்த நபர் ஒருவரையம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,அப்பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்க்கு இடமான முறையில் காணப்பட்ட வீடொன்றினை சோதனையிட்டனர்.

அதன் போது வீட்டின் பின் பகுதியில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த 150 லீட்டர் கோடா பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

அதனை அடுத்து , குறித்த வீட்டில் நின்றிருந்த நபரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More