167
பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரை கண்காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர் தலைமையில் குறித்த கண்காட்சி இடம்பெற்றது. போதையற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் விதமாக குறித்த கண்காட்சி மேற்கொள்ளப்பட்டது.
முன்னைய காலங்களில் மாணவர்கள் முதல் பெரியவர் வரை முத்திரைகளை சேகரித்து அவற்றை காட்சிப்படுத்துதலும் முத்திரைகளை நினைவுச்சின்னமாக பேணி பாதுகாத்தலும் அதனூடாக வருமானத்தை மேம்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் காணப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது மாணவர்களிடையே முத்திரை சேகரிக்கும் பழக்கம் மிகவும் அரிதாகவே உள்ளது அத்துடன் மாணவர்கள் போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டு தமது எதிர்காலத்தை வீணடிக்கின்றனர்.
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கை உருவாக்கும் நோக்குடன் குறித்த முத்திரைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த கண்காட்சியில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலய மாணவர்கள் அயல் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களை என பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love