Home இலங்கைமடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் மாணவன் பலி

மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் மாணவன் பலி

by admin

பலபிட்டிய – பட்டபொல, கொபேய்துடுவ பிரதேசத்தில் மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் 14 வயதான  மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், மடிக்கணினியை தனது மடியில் வைத்து பயன்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு  மடிக்கணினியின் சார்ஜர் வெடித்துள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன், பொல்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின்  உடல்  பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  ம்பவம் தொடர்பிலான விசாரணைகளை  காவல்துறையினா் ஆரம்பித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More