Home இலங்கையாழ்.மத்திய கல்லூரியில் புத்தக கண்காட்சியும் விற்பனையும்

யாழ்.மத்திய கல்லூரியில் புத்தக கண்காட்சியும் விற்பனையும்

by admin

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி ரொமைன் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் ஜே.பிறட்லி தலைமை தாங்கியதுடன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இக் கண்காட்சியில் தேசிய கல்வி நிறுவகத்தின் அச்சிடல் மற்றும் வெளியீடுகள் துறையின் பணிப்பாளர் கே.பிரபாகரன், மாகாண கல்வி உதவிப் பணிப்பாளர் ஆ. உதயகுமார், தேசிய கல்வி நிறுவகத்தின் பதவி நிலை அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியானது எதிர்வரும் 20ஆமாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் என்பதுடன் இதன்போது புத்தகங்கள் 20% விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More