தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்து வியட்நாமில் உயிர்மாய்க்க முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
எனினும், குறித்த அகதிகளை மீள இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே, இரண்டு அகதிகள் கடந்த 18ம் தேதி தமது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் ,அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை இலங்கை வெளிவிவாகர அமைச்சு இன்றைய தினம் வியாழக்கிழமை கிரிதரனின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.