இலங்கை பிரதான செய்திகள்

சுழிபுரத்தில் பாண் விற்பனையாளர் மீது தாக்குதல் – வாகனமும் உடைப்பு!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று  பாண் விற்பனையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவர் பாண் விற்க பயன்படுத்தும் வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது.  மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பகத்தின் உற்பத்தி பொருட்களை , காட்டுப்புலம் பகுதிக்கு விற்பனைக்கு எடுத்து சென்ற போது முகங்களை மூடி துணிகளை கட்டியவாறு மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியான விற்பனையாளர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காவல்துறையின ர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.