கார்கில்ஸ் நிறுவனத்தின் வருடாந்த விவசாயிகளின் நலன் பேணும் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 74 பயனாளிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வடக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் மாவட்ட விவசாய பணிப்பாளர் மற்றும் கால்நடை வளர்ப்பு திணைக்கள பணிப்பாளர் கார்கில்ஸ் நிறுவன பிரதம முகாமையாளர்களில் ஒருவர், மற்றும் கார்கில்ஸ் நிறுவனத்தின் வடக்கு யாழ்ப்பாண மாவட்ட முகாமையாளர்கள் விரிவாக்கம் பிரிவு முகாமையாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்து தமது கல்வினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய குடும்பங்களின் பிள்ளைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும் புலமைப்பரிசில் தொகையினைப் பெற்றுக் கொண்டார்கள்
பால் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணையாளர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 52 பேருக்கு புலமைப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.