Home இலங்கையாழில். போதைப்பொருளை கட்டுப்படுத்த விசேட கூட்டம்!

யாழில். போதைப்பொருளை கட்டுப்படுத்த விசேட கூட்டம்!

by admin

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி சுரேந்திரகுமாரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முப்படையினர், காவற்துறையினர், சுகாதார துறை அதிகாரிகள், சட்ட மருத்துவ அதிகாரி, போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் என பல்வேறுபட்ட தரப்புகளும் பங்கேற்றனர்.

போதைப்பொருள் பாவனையை தடுத்தல், போதைப்பொருள் பாவனையாளர்களை மீட்டெடுத்தல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More