வெளிநாட்டுக் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் ஏனைய நாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தலைவர்களை சீனா அழைத்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோரை இந்த வாரம் பெய்ஜிங்கிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் கடன் நெருக்கடிக்கு எவ்வாறு நிவாரணம் வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.