188
தாய்லாந்து , இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள், இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்தனர். இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கும் பயணம் செய்தனர்.
அங்கு நெசவுப் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டதுடன், பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.
குறித்த தூதுவர் குழு நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதோடு, தொடர்ச்சியாக யாழ் கோட்டைக்கும் பயணமொன்றினையும் மேற்கொண்டனர்.
Spread the love