143
சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.
கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இவ் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மஹாகவியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி மதிப்பளிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் கலாநிதி சிதம்பரமோகன், மதகுருமார் சமூகமட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love