இலங்கையில் கடமையாற்றிய 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
வேறு நாடுகளில் உள்ள சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள் வழங்கும் அதிக சம்பளம் மற்றும் வசதிகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலைமை காரணமாக இலங்கையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது இன்று நாட்டின் அனைத்து துறைகளிலும் காணப்படும் பொதுவான பிரச்சினை எனவும், இருபத்தைந்து புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் பல விமானிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.