207
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்து கலந்துரையாடியது.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. பிரான்ஸ்,பஹ்ரைன்,வியட்னாம், ஜேர்மனி, லெபனான்,இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்த சந்திப்பில் ஈடுபட்டது.
இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தூதுவர் குழு பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love