174
கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love