181
உமி மூடைக்குள் கசிப்பு கடத்தி சென்ற மூவர் இன்றைய தினம் (04.01.23) மாலை யாழ்ப்பாண காவற் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் நெல் உடைத்த உமி மூடைக்குள் கசிப்பினை மறைத்து கடத்தி சென்ற நிலையில் யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திக்கு அருகில் பேருந்தினை மறித்து காவற்துறையினர் சோதனையிட்ட போது கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து உமி மூடையினை கொண்டு சென்ற மூவரையும் காவற்துறையினர் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் உமி மூடைகளையும் சான்று பொருட்களாக காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
Spread the love