ரொனால்டோவின் செளதி அரேபிய பிரசன்னம் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி எனவும், அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் என்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் கூறியிருக்கிறார்.
அடுத்த 5 ஆண்டுகளில் செளதி அரேபியா முற்றிலும் வேறானதாக காட்சியளிக்கும், பஹ்ரைன், குவைத் மட்டுமின்றி, தங்களுடன் முரண்படும் கத்தாரும் கூட முற்றிலுமாக மாறிவிடும். ஏனெனில் அவை திடமான பொருளாதார வலிமையை கொண்டுள்ளன, என காணொளி செய்தி ஒன்றில் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், லெபனான், ஜோர்டான், எகிப்து, இராக் ஆகியவையும் இவற்றிற்கு விதிவிலக்கு அல்ல. அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் வெற்றிகரமாக சாதித்துக் காட்டினால் பல நாடுகள் தங்களின் அடிச்சுவட்டை பின்தொடர்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரபு பிராந்தியத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும். இது செளதியின் போராட்டம். இது தன்னுடைய போராட்டம், உலகை அரபு பிராந்தியம் வழிநடத்துவதை காணும் முன்பாக தான் சாகப் போவதில்லை இந்த நோக்கம் 100 சதவீதம் நிறைவேறும், என அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மதத்தை முன்னிறுத்துவது தவிர்த்து, செளதி அரேபியா நல்ல வலிமையான, நடைமுறை சாத்தியமுள்ள சக்தியாக திகழ்ந்தாலும், இன்னும் மேலேழ விரும்புகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து உலகில் கடந்த 20 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயராக நிலைத்துவிட்ட ரொனால்டோவை செளதி அரேபியாவின் அல்-நாசர் அணி மிகப்பெரிய விளையாட்டு துறையில் இதுவரை வளங்கப்படாத தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
சௌதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்த ரொனால்டோ 2025-ம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டுகள் 535 மில்லின் டொலர் ஒப்பந்தத்தில் அந்த அணிக்காக ரொனால்டோ விளையாடவுள்ளார்.
அல்நாசர் அணியில் அதிகாரபூர்வமாக இணைந்த அறிமுக விழாவில் பேசிய ரொனால்டோ, ஐரோப்பாவில் பல சாதனைகளைப் படைத்துவிட்டதாகவும், செளதி அரேபியாவில் சில சாதனைகளை படைக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.