Home இலங்கைஅரகலய மக்கள் இயக்க செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது!

அரகலய மக்கள் இயக்க செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது!

by admin

அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கமகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் (SLRC) சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் ‘அரகலய’ செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 13 அன்று, போராட்டக்காரர்கள் அரசுக்கு சொந்தமான ஊடக நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து சிறிது நேரம் ஒலிபரப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விடுமுறைக்காக டுபாக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இலங்கை திரும்பியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More