155
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (05.01.23) காலை நாடு திரும்பினார்.
துபாயிலிருந்து முன்னாள் ஜனாதிபதி இன்று (05.01.23) காலை 8.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அமெரிக்காவில் மீண்டும் குடியேறி, அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்திருந்தார் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love