பொலிவியன் ஆட்கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் இன்று காலை தெற்கு லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிவியாவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான அதிநவீன ஆட்கடத்தல் நடவடிக்கையில் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள், தெற்கு லண்டனில் பிறப்பிக்க்பட்ட தொடர்ச்சியான பிடியானைகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் மற்றும் நிதிப் புலனாய்வு (CFI) குழுவின் உள்துறை அலுவலக அதிகாரிகளின் விசாரணையைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவ சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ட்ட 3 பேர் இரண்டு முகவரிகளில் கைது செய்யப்பட்டனர்.
அதே முகவரியில் சுமார் 1,500 பவுண்ட் பணமும் இரண்டு தவறான அடையாள ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து எரித்திரியா நாட்டைச் சேர்ந்த கிடானே ஸெகாரியாஸ் ஹப்தேமரியம் என்ற பிரபல ஆட்கடத்தல் மன்னன், சூடானில் ஜனவரி 1ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இவர் இன்றபோல் பொலிசாரின் சிகப்பு பட்டியலில் பல தடவைகள் தேட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.