Home இலங்கைஅபிவிருத்தி லொத்தர் சபை வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு  

அபிவிருத்தி லொத்தர் சபை வெற்றியாளர்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு  

by admin

அபிவிருத்தி லொத்தர் சபையின்  கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில்  வெற்றி பெற்ற  வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர்   ஜீவன் தியாகராசா தலைமையில் இன்று சனிக்கிழமை(7) காலை   வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்  வைத்து காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

வடகிழக்கு பிராந்திய முகாமையாளர்  குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி  .தவகோகுலன்,கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி  பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் மன்னார் மாவட்டத்தில் சனிதா ரிக்கற்றின் மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை மற்றும் பளைபிரதேசத்தில் வலம்புரி அதிஷ்ட  ரிக்கற்மூலம்   வெற்றிபெற்ற  வெற்றியாளருக்கு 20 இலட்சம் காசோலை மற்றும் சங்கானை,யாழ்பாணம்,சாவகச்சேரி,வவுனியா மன்னார்  பிரதேசங்களில் சனிதா, அதோடிபதி,கப்ருக்க அதிஷ்ட ரிக்கறூடாக வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் காசோலைகளும்   ஆளுநர் ஜீவன் தியாகராசாவினால் வழங்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More