236

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.


Spread the love