Home உலகம்உக்ரைனில் ஹெலிகொப்டர் விபத்து – உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர்

உக்ரைனில் ஹெலிகொப்டர் விபத்து – உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர்

by admin

உக்ரைன் தலைநகர் கீவ்   அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.  உள்துறை அமைச்சர் டென்னிஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின்  சிரேஸ்ட அதிகாரிகள் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் திடீரென   பாலர் பாடசாலை ஒன்றின் அருகில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் அவசர சேவைக்கு சொந்தமான இந்த ஹெலிகொப்டர் உள்துறை அமைச்சர் டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 8 பேர் பயணம் செய்த நிலையில் அது  பாலர் பாடசாலை    அருகே  விழுந்து விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும்  20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவா்களில்  10 பேர் குழந்தைகள் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More