அந்தமான் தீவுகளில் ஒன்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான மோதலில் மரணம் அடைந்த தமிழ்நாட்டு ராணுவ வீரர் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் பெயரை, பிரதமர் மோடி சூட்டியுள்ளார் .
பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றின் பக்கங்களில் மறக்கப்பட்ட அதே நேதாஜி 21-ம் நூற்றாண்டில் நினைவு கூறப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அந்தமானில் முதன்முறையாக மூவர்ணக்கொடியை நேதாஜி ஏற்றிய அதே இடத்தில் இன்று, இந்திய கொடி வானுயரப் பறப்பதாக அவர் எடுத்துரைத்தார்.
இது இந்த பகுதிக்கு பயணிக்கும் அனைத்து மக்களின் இதயங்களிலும் தேசபக்தியை நிரப்பும் என்று அவர் தெரிவித்தார். அவரது நினைவாக கட்டப்படும் புதிய அருங்காட்சியகம் மற்றம் நினைவகம் அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மேலும் நினைவில் அமையக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2019-ம் ஆண்டில் டில்லி செங்கோட்டையில் நேதாஜி அருங்காட்சியகம் திறக்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், அந்த இடம் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது என்று கூறினார். அவரது 125-வது பிறந்த தினத்தையொட்டி வங்காளத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தெரிவித்த அவர், அந்த தினம் பராக்கிரம தினமாக அறிவிக்கப்பட்டது என்று கூறினார்.
வங்காளம் முதல் டில்லி வரையிலும், டில்லி முதல் அந்தமான் வரையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளும் நேதாஜியின் மரபைப் போற்றி வணங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான பணிகள் சுதந்திரத்திரத்திற்குப் பிறகு, உடனே விளக்கியிருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர், கடந்த 8-9 ஆண்டுகளில் அவர்கள் அப்பணியை செய்ததாகக் கூறினார்.
1943-ம் ஆண்டு நாட்டின் இந்தப்பகுதியில் சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு அமைக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நாடு அதிகப் பெருமையுடன் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75 ஆண்டு நிறைவையொட்டி செங்கோட்டையின் கொடி ஏற்றப்பட்டு நேதாஜிக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக நேதாஜியின் வாழ்க்கை முறை குறித்து கோப்புகளை வகைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து குறிப்பிட்ட பிரதமர், அப்பணி முழு அர்ப்பணிப்புடன் நிறைவு செய்யப்பட்டதாக கூறினார். இன்று நமது ஜனநாயக அமைப்பிற்கு முன்பாக நேதாஜியின் சிலை மற்றும் கடமைப்பாதை அமைந்துள்ளது, நமது கடமைகளை அவை நினைவுப்படுத்துவதாக தெரிவித்தார்.