192
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன் போட்டியிட்ட ஜோகோவிச் 6-3, 7-6(4) 7-6 (5) என்ற செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் பெற்ற 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன் மூலம் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளாா்.
Spread the love