மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதான இளைஞா் ஒருவா் வெள்ளை வானில் கடத்தப்பட்டு , கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா் என தெமட்டகொட காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
குறித்த இளைஞனை விசாரணை செய்யவிருப்பதாக தொிவித்த ஒரு குழுவினர் கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினா் கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார் எனத் தொிவித்துள்ளனா்.
எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்துள்ளாா் எனத் தொிவித்துள்ள தெமட்டகொட காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment